தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு - Karnataka floods

பெங்களூரு: கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு

By

Published : Aug 12, 2019, 10:32 AM IST

Updated : Aug 12, 2019, 10:54 AM IST

கர்நாடக மாநிலத்தில் வரலாறு காணாத தொடர் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குழந்தைகள், பெண்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பொதுமக்களின் இயல்பு நிலை வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரலாறு காணாத தொடர் கனமழை

தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் இரவும், பகலுமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அவ்வப்போது மீட்பு பணி பாதிக்கப்பட்டு, சிலர் உயிரிழந்த பரிதாபமும் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் வட பகுதியிலுள்ள மாவட்டங்களும், கடற்கரைக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளும் கன மழையாலும், கடுமையான நிலச்சரிவாலும் முற்றிலும் நீரில் மூழ்கிவிட்டன.

மேலும், வரலாறு காணாத வெள்ளத்தால் இதுவரை கர்நாடகா மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14ஆகவும் உயர்ந்துள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Last Updated : Aug 12, 2019, 10:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details