தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொடரும் வனவிலங்குகளின் மரணம்! - ஷெட்டிஹள்ளி வானப்பகுதி

பெங்களூரு: ஷெட்டிஹள்ளி வனப்பகுதியில் யானை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

elephant-dies
elephant-dies

By

Published : Oct 21, 2020, 10:37 PM IST

கர்நாடக மாநிலம் ஷிமோகாவிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள சக்ரேபாயலு என்ற இடத்தில் யானை பயிற்சி முகாம் உள்ளது. வனப்பகுதியில் யானைக் கூட்டங்களால் ஆதரவற்ற நிலையில் விட்டுச்செல்லப்படும் யானைக்குட்டிகள் இந்த முகாமில் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. அனுபவமிக்க யானைப்பாகர்கள் இங்கு யானைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்கின்றனர்.

இங்கு ஏகாதந்தா என்ற 35 வயது மிக்க யானை வளர்ந்துவந்தது. ஹாசன் மாவட்டம் சக்லெஷ்பூர் வனப்பகுதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானை முகாமிற்கு அழைத்துவரப்பட்டது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 20) ஷெட்டிஹள்ளி வானப்பகுதியில் ஏகாதந்தா யானை இறந்துகிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்துவந்த வனத்துறையினர், மருத்துவக் குழுவினர் யானையை அங்கேயே உடற்கூறாய்வு செய்தனர். பின்னர், யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இந்த யானை மாரடைப்பால் உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு - உடற்கூறாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details