தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்! - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

டெல்லி: கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம்

By

Published : Jul 17, 2019, 11:16 AM IST

கர்நாடகாவின் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 15 பேர் தங்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகரை வலியுறுத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு, சபாநாயகர் முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தார்.

இந்நிலையில், இதன் தீர்ப்பு குறித்து இன்று வெளியிடப்பட்டது. அதில் கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும், ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details