தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி! - காங்கிரஸ்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றுள்ளது.

Karnataka Chief Minister BS Yediyurappa wins trust vote

By

Published : Jul 29, 2019, 12:08 PM IST

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக ஆட்சியமைத்தது. இதில் அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து இன்று கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. கர்நாடகாவில் ஆட்சி நடத்த 104 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில், 105 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

ABOUT THE AUTHOR

...view details