கர்நாடகாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இணைய அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) வைத்திருந்தவர்களைக் கூட அம்மாநில எல்லைக்குள் அனுமதிக்கவில்லை.
ஐந்து மாநிலங்களிலிருந்து யாருக்கும் அனுமதியில்லை - கர்நாடக அரசு அதிரடி! - கர்நாடகாவில் யாருக்கும் அனுமதியில்லை
Karnataka Cabinet decides to restrict air travel from five states Karnataka Cabinet decides to restrict air travel from five states- Maharashtra, Gujarat, Tamil Nadu, Madhya Pradesh and Rajasthan - owing to a big number of domestic travellers testing COVID-19 positive, thereby putting state facilities under stress. Cabinet also decides to extend prohibition on road traffic from Gujarat, Tamil Nadu and Maharashtra. Karnataka government to temporarily ban flights from Maharastra, Gujarat, Tamil Nadu, Madhya Pradesh and Rajasthan over high load of COVID-19 cases arriving from these states.
18:16 May 28
பெங்களூரு: கரோனா பரவுவதைத் தடுக்க தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்கள், ரயில்கள் என அனைத்து வாகனங்களும் கர்நாடகாவுக்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் விமான போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. விமான பயணிகளிடம் நடத்தப்படும் சோதனைகளில், பெருமளவு பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் வருகிறது. இச்சூழலில் கர்நாடகாவில் இன்று மட்டும் 75 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
இதில் 46 பேர் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா திரும்பியவர்கள். மேலும் கர்நாடகாவில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,493 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் செயல்படுத்த கர்நாடகா இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரயில்கள், வாகனங்கள் என எதையும் அனுமதிக்க முடியாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது.