தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா தொடங்கியது - karaikal ammaiyar mangani festival beguns

புதுச்சேரி: புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

karaikal ammaiyar mangani festival beguns
karaikal ammaiyar mangani festival beguns

By

Published : Jul 2, 2020, 11:30 AM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழாவானது மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

63 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மாரான இவர், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பெற்றதாக ஐதிகம்.

அந்த வகையில், காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ஆண்டுதோறும் பத்து நாள்கள் திருவிழா நடைபெறும்.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றின் பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நான்கு நாள்கள் மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

அதன்படி விழாவில் முதல் நாள் நிகழ்வான மாப்பிள்ளை அழைப்பு, சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து தொடங்கி அம்மையார் ஆலயத்தை வந்தடையும்.

இவ்வாண்டு கரோனா ஊரடங்கால் அம்மையார் ஆலயத்தின் அருகே உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் பரமதச்செட்டியார் மாப்பிள்ளை கோலத்தில் மேளதாளத்துடன் வலம்வர பக்தர்கள் இன்றி ஆலயத்தின் உள்ளேயே மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து காரைக்கால் அம்மையாருக்கு திருக் கல்யாணம் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜுலை 4ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைக்கும் நிகழ்வும் பக்தர்கள் இன்றி கோவில் உள்ளேயே நடைபெற உள்ளது.

இதையும் படிங்க... குறைவாக இயக்கப்படும் பேருந்துகள் - காரைக்காலில் ஒரே பேருந்தில் முண்டியடித்து மக்கள் பயணிக்கும் அவலம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details