இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு நாள் அரசுப் பயணமாக சென்னை வந்துள்ள இரு நாட்டுத் தலைவர்களுக்காக சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், "காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இம்ரான் கானை ஜி ஜின்பிங் ஆதரிக்கிறார்.
எனவே, ஜி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் மோடி சந்திக்கும் போது இதனைத் தெரிவிக்க வேண்டும்,
- சீனா ஆக்கிரமிப்பு, காஷ்மீரில் உள்ள 5000 கி.மீ. நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.
- இந்தியாவில் 5ஜி-க்காக ஹவாய் நிறுவனம் வராது என்பதை உறுதி செய்யவும் என்றும் கூறிய அவர்,
- மோடி உங்களது 56 இன்ச் மார்பகங்களைக் காட்டவும்" என்றும் ட்விட்டரில் பகடி செய்துள்ளார். இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கும் கபில்தேவ் - தொடரும் கிரிக்கெட் சர்ச்சை!