இரண்டாம் கட்ட மக்களவை பொதுத்தேர்தல் தமிழ்நாடு, கர்நாடகா, பிகார் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் சற்றுமுன் கிடைத்த தகவல்படி 61.52 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் வசந்தகுமார் முதலிடம்! - வசந்தகுமார்
இரண்டாம் கட்ட மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவோர்களில் அதிக சொத்து மதிப்பு உள்ள வேட்பாளராக கன்னியாகுமாரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ளவர்களின் பட்டியலை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏ.டி.ஆர்.) வெளியிட்டுள்ளது. இதில், கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முதலிடம் பிடித்துள்ளார். அவரிடம் 412 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது சொத்து மதிப்பு 45 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு சொந்தமாக தமிழ்நாட்டில் தனியார் தொலைக்காட்சி ஒன்றும், வசந்த் அண்ட் கோ என்ற பெயரில் பல்வேறு கிளைகள் கொண்ட நிறுவனமும் உள்ளது. இவருக்கு அடுத்தப்படியாக, 340 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் பிகார் மாநிலத்தின் புர்னியா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உதய் சிங் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிரபல நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி 250 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.