நேற்று மாலை நடைபெற்ற முத்தலாக் மசோதாவிற்கான மாநிலங்களவை வாக்கெடுப்பில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி மாநிலங்களவையிலிருந்த 11 உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக வெளிநடப்பு நாடகத்தை அம்பலப்படுத்திய கனிமொழி! - விமர்சனம்
டெல்லி: முத்தலாக் மசோதா வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
கனிமொழி
இந்த வாக்கெடுப்பின்போது, அதிமுக பங்கேற்காததால் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிரான வாக்குகளின் எண்ணிக்கை குறைவான அளவே பதிவாகியுள்ளது. தன்னுடைய எதிர்ப்பை மாநிலங்களவையின் தெரிவித்திருந்தால் இந்த மசோதா வெற்றிபெற்றிருக்காது.
ஆகவே, அதிமுகவின் இச்செயல் வெட்கக்கேடானது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் விளாசியுள்ளார்.