உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தப்பட்ட குழந்தைகளை பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பினர் மீட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தைகள் ரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது குறித்து பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பைச் சேர்ந்த அர்ஷத் மெஹந்தி கூறுகையில், "அவத்-அசாம் எக்ஸ்பிரஸில் குழந்தை தொழிலாளியாகப் பயன்படுத்த சுமார் 10 முதல் 12 குழந்தைகள் டெல்லிக்கு அழைத்துவரப்படுவதாக நேற்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது.