ஜம்மு-காஷ்மீருக்கு 370ஆவது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து கிட்டத்தட்ட 65 நாட்கள ஆகின்றனது. ஆனால், இன்னமும் அம்மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பெருவாரியான பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுவதால் அப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவர சிரமப்படுகின்றனர்.
ஆகையால், தேர்தவுகள் நெருங்கிவருவதால் பள்ளியில் பாடங்களை நடத்தி முடிப்பதற்காக ஆசிரியர்கள் மும்முரம் காட்டிவருகின்றனர். அதன் ஒரு முயற்சியாக ஸ்ரீநகரில் உள்ள செப்தன், பெமினா, சரைய் பாலா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் காலை 8-11 மணிவரை இயங்குகிறது. மேலும் கல்வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் இருந்து மாணவர்கள் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க பள்ளி சீருடை அணியாமலும் சில நாட்களில் வர அறிவுறத்தப்படுகின்றனர்.