தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி வி. ராமசுப்ரமணியன் ஹிமாச்சலப் பிரதேசத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சிம்லாவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக வி. ராமசுப்ரமணியன் பதவியேற்பு! - Himachal Pradesh
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி. ராமசுப்ரமணியன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
justice-v-ramasubramanian
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த நீதிபதி வி. ராமசுப்ரமணியன், தெலங்கானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், மே 10ஆம் தேதி கொலீஜியம் இவரை, இமாச்சலப் பிரதேசத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்தது.