நீதிபதிகள் குறைவான எண்ணிக்கையில் உள்ளதால்தான் நீதிமன்றத்தில் வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறிவந்தனர். தொடர்ந்து பல காலமாக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஒதுக்கப்பட்ட முழு அளவில் நீதிபதிகள் நிரப்பப்படாமல் இருந்தனர். இதனை பலர் கடுமையாக விமர்சித்துவந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பாஜக ஆட்சியில் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்வு
டெல்லி: பாஜக ஆட்சியில் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Prakash javadekar
அப்போது அவர் பேசுகையில், "உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30ல் இருந்து 33ஆக 2016ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 906ல் இருந்து 1079ஆக அதே 2016 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. மோடி தலைமையிலான அரசுதான், நீதிபதிகளின் எண்ணிக்கையை 10 விழுக்காடாக உயர்த்தியுள்ளது" என்றார்.