ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2008ஆம் ஆண்டு மே மாதம் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 71 பேர் உயிரிழந்தனர், 185 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியாவின் முஜாகிதீன் இயக்கம் பொறுப்பேற்றது. இச்சம்பவத்தில் முகமது சைப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சைபுர் ரகுமான், ஷாபாஸ் உசேன் உள்ளிட்ட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கை ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்துவந்தது. இந்நிலையில், குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட முகமது சைப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சைபுர் ரகுமான் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அஜய் குமார் சர்மா தீர்ப்பளித்தார். ஷாபாஸ் உசேன் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.
வெடிகுண்டு வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி அஜய் குமார் சர்மா, அண்மையில், டிஜிபி பூபேந்திர சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.