தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: பாஜக போட்டியிடும் தொகுதிகள் இன்று இரவு அறிவிப்பு! - பாஜக - ஐக்கிய ஜனதா தளம்

பாட்னா: பிகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையே இறுதி செய்யப்பட்ட தொகுதி ஒப்பந்தம் இன்று டெல்லியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

election
election

By

Published : Oct 4, 2020, 5:51 PM IST

பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் அவரின் இல்லத்தில் இன்று (அக்.04) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பிகார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ், அம்மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடி, தேசிய செயலாளர் புபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையே தொகுதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் , இது குறித்த விவரம் இன்று இரவுக்குள் டெல்லியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:பிகார் சட்டப்பேரவை தேர்தல் 2020; எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!

ABOUT THE AUTHOR

...view details