இஸ்லாமிய அமைப்பான தப்லிகி ஜமாஅத் தனது நிகழ்வை டெல்லியில் நடத்திய நாளில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழக்கம்போல ஒரு ராம நவாமி கண்காட்சியை அயோத்தியில் நடத்தினார் என்று ஆங்கில பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் செய்தி வெளியிட்டார்.
அதில் கரோனா அச்சுறுத்தல் இருந்த போதிலும் உத்தரப் பிரதேசத்தில் கடந்த மாதம் (மார்ச்) 25ஆம் தேதி முதல் இன்று வரை (ஏப்ரல்2) அயோத்தியில் ராம நவமியை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் செயல்பட்டார்.
கரோனா அச்சுறுத்தலிருந்து ராமர் காப்பார் என்று அயோத்தியில் நடந்த மத நிகழ்ச்சியையும் அவர் மேற்கோள் காட்டினார். இந்நிலையில் சித்தார்த் வரதராஜன் மீது பைசாபாத் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள வரதராஜன், “இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. மேலும் இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும்” என்றுள்ளார்.
இதையும் படிங்க: உலகை உலுக்கும் கரோனா: நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்பு!