பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் (55), 32 வயதான கேரி சைமண்ட்ஸ் என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு கடந்த மாதம் ஏப்ரல் 29ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் இக்குழந்தைக்குத் தம்பதிகள் வில்பிரெட் லாரீ நிகோலஸ் ஜான்சன் எனப் பெயரிட்டுள்ளனர்.
போரிஸ் ஜான்சன் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நிக் பிரைஸ், மருத்துவர் நிக் ஹார்ட். இந்த மருத்துவர்கள் இருவரையும் கெளரவிக்கும் பொருட்டே குழந்தைக்கு 'நிகோலஸ்' எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறியுள்ளார், போரிஸ் ஜான்சன்.
இதுகுறித்து சைமண்ட்ஸ், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 'ஏப்ரல் 29ஆம் தேதி பிறந்த வில்பிரட் லாரீ நிகோலஸ் ஜான்சனை அறிமுகப்படுத்துகிறோம்.
போரிஸின் தாத்தா பெயரான வில்பிரெட்டையும், என் தாத்தா பெயரான லாரீயையும், போரிஸை உயிர்பிழைக்கவைத்த மருத்துவர்கள் நிக் பிரைஸ், மருத்துவர் நிக் ஹார்ட் ஆகியோரை கெளரவிக்கும் பொருட்டு நிகோலஸ் என்ற பெயரையும் ஒன்றுசேர்த்து குழந்தைக்குச் சூட்டியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :5ஆவது வயதில் அடியெடுத்து வைத்த இங்கிலாந்து ராஜ குமாரி!