மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டம் அந்தியாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் ராஜக் மும்பையில் பணிபுரிந்து வந்தார். இவர் கரோனா நெருக்கடியினால் வேலையிழந்து தனது கிராமத்திற்கே மீண்டும் திரும்பி வந்தார். இந்த வேலையிழப்பு அவருடைய குடும்பத்தை வறுமையின் விளிம்பிற்கே அழைத்துச் சென்றது. இதனால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டது. சில நேரங்களில் அது மிகப்பெரிய வாக்குவாதமாகவும் உருவெடுத்தது.
இந்நிலையில், நேற்றும் (ஆகஸ்ட் 7) இந்தத் தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஷ், தனது மகள்களான அனுஷ்கா(10), சின்னா(8), சந்தியா(5) ஆகியோரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து ஒரு நீளமான கயிறை எடுத்து தனது இடுப்பில் கட்டிய ராஜேஷ், அதே கயிறால் தனது மகள்களையும் இணைத்து கட்டியபடி அவருடைய வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் குதித்தார்.