கோவிட்-19 தொற்றின் தாக்கம் தேசிய தலைநகர் டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்நகரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்பட பல விஷ்யங்களிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சுகாதார நிலையத்தில் உள்ள மருந்தக ஊழியருக்கு, சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள் துறை அமைச்சகமும் டெல்லி அரசும் வெளியிட்டுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் நாங்கள் முறையாக பின்பற்றி வருகிறோம். ஆனாலும், இந்த கரோனா காலத்தில் ஒருவருக்கு வீடுகளைத் தவிர வேறெந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்க முடியாது.