தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாக்குச்சாவடியில் ஸ்டைலாக துப்பாக்கியுடன் சுற்றிய காங்கிரஸ் வேட்பாளர்! - Jharkhand Assembly polls update

ராஞ்சி: பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் தன்னை தற்காத்துக் கொள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடி அருகே கையில் துப்பாக்கி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குச்சாவடியில் ஸ்டைலாக கன்னை வைத்துக்கொண்டு சுத்துய வேட்பாளர்!
cong-candidate

By

Published : Nov 30, 2019, 2:44 PM IST

Updated : Nov 30, 2019, 3:53 PM IST

ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாவட்டங்களின் 13 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில், சைன்பூர் தொகுதியின் வாக்குச்சாவடி ஒன்றில் தல்தோகாஞ் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.என். திருப்பதிக்கு எதிராக பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கல்வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் முன்னேறி செல்வதை அவர்கள் தடுக்க முயன்றுள்ளனர்.

இதனால் தன்னை போராட்டகாரர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள திருப்பதி கை துப்பாக்கி ஒன்றை வைத்து கொண்டு அந்த வாக்குச்சாவடியில் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பிற்காக அங்கிருந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.


வாக்குச்சாவடியில் ஸ்டைலாக கன்னை வைத்துக்கொண்டு சுற்றிய காங்கிரஸ் வேட்பாளர்!

மேலும் படிக்க:'உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் 5 ட்ரில்லியனாக உயரும்'

Last Updated : Nov 30, 2019, 3:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details