ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்ததில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷி இ முகம்மது பயங்கரவாத அமைப்புதான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. தங்கள் மண்ணில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஒத்துழைப்பதை பாகிஸ்தான் அரசு நிறுத்திட வேண்டும், அந்த அமைப்புகளுக்கு உடனே தடைவிதிக்க வேண்டும் என்று இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை - பாகிஸ்தான் மறுப்பு - தீவிரவாத தாக்குதல்
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை மறுக்கும் விதமாக பாகிஸ்தான் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான்
இதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 'மிகவும் வேதனை அளிக்கக் கூடிய நிகழ்வு இது. இத்தகைய பயங்கரவாத செயல்கள் எங்கு நடந்தாலும் பாகிஸ்தான் அதைக் கண்டித்துள்ளது. விசாரணை எதுவும் செய்யாமலே இந்த தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான்-தான் என இந்திய அரசும், இந்திய மீடியாக்களும் குற்றம்சாட்டி வருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று' என்று தெரிவித்துள்ளது.