கரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக ஜிப்மரில் உள்ள வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. தற்போது, தொற்று குறைந்துள்ள காரணத்தினால், வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் மே 8ஆம் தேதி முதல் தொடங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜிப்மரில் மே 8ஆம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு தொடங்கும்! - jipmer hospital
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் மே 8ஆம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மரில் மே 8ஆம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு தொடங்கும்
ஜிப்மர் மருத்துவமனையின் 0413 2298200 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. நுழைவுவாயிலில் உரிய சோதனைக்குப் பிறகே நோயாளிகள் அனுமதிக்கப்படுவார் என்றும், நோயாளிகள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கை மீறிய எம்.எல்.ஏ.வுக்குப் பிணை!