தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொடங்கியது ஜிப்மர் எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு - நுழைவுத்தேர்வு

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு தற்போது நடைபெற்றுவருகிறது.

File pic

By

Published : Jun 2, 2019, 10:56 AM IST

புதுச்சேரி, கரைக்காலில் அமைந்துள்ள ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்விக்கு மிகவும் பிரபலமானது.

இதில் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இந்த நுழைவுத் தேர்வானது காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்டுகளாக நடைபெற உள்ளது.

ஜிப்மர் மருத்துவமனையில் 150 இடங்களுக்கும் காரைக்கால் ஜிப்மர் கிளையில் 50 இடங்களுக்கும் என மொத்தம் 200 இடங்களுக்கு ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 272 மாணவர்கள் எழுதுகின்றனர். ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details