கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் 38ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவரின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டிலும், அவரின் பிறந்தநாளை, இளைஞர் கிரிக்கெட் க்ளப் சார்பில் கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ந்தனர்.
மண்ணின் மைந்தனின் பிறந்த நாளை கொண்டாடிய சீடர்கள் - தோனி
ராஞ்சி: தோனியின் 38ஆவது பிறந்த நாளையொட்டி, ஜார்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மண்ணின் மைந்தனின் பிறந்த நாளை கொண்டாடிய சீடர்கள்
இந்த மாணவர்கள் போல் ஒரு காலத்தில் இங்கு கிரிக்கெட் விளையாடிய தோனி, பின்னாளில் இந்திய கிரிக்கெட் வரலாற்றை மாற்றியமைத்தார். தோனி தலைமையில் இந்திய அணி டி-20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என பல கோப்பைகளை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.