தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விஸ்வரூபம் எடுக்கும் ஜெட் ஏர்வேஸ் விவகாரம்! - ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்து

டெல்லி: ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

jet airways

By

Published : Apr 18, 2019, 8:34 PM IST

இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். கடந்த 25 ஆண்டுகளாக விமான சேவையை அளித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் 8 ஆயிரம் கோடி கடன் சுமையில் சிக்கியுள்ளது. நிறுவனத்தில் பணிபுரியும் 25 ஆயிரம் ஊழியர்களுக்கு, கடந்த 3 மாதங்கள் சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமானத்தில் இயக்காமல் நிறுத்தி வைக்கப்போவதாக ஊழியர்கள் அறிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்றும்படியும் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கூறியதாவது, விமானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. மற்ற ஊழியர்களுக்கு 7 மாத சம்பளம் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தலில் பிஸியாகிவிட்டனர்' என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details