தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது!

ஸ்ரீநகர்: ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

jem-militant-arrested-in-j-ks-pulwama
jem-militant-arrested-in-j-ks-pulwama

By

Published : May 6, 2020, 12:39 PM IST

இதுகுறித்து காவல் துறையினர் கூறுககையில், 'சதுரா பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை சோதனை செய்தோம். அவரிடம் விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார்.

பின்னர் அவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் அவரிடமிருந்த ஏகே-56 ரக துப்பாக்கி, ஏகே 47 ரக துப்பாக்கிகள் ஐந்து, மூன்று சீன கை எறி குண்டுகள், இரண்டு செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன' எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மனைவியை கொன்றுவிட்டு போலீஸ் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details