நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி முதல் தொடங்கி, அக்டோபர் ஒன்றாம் தேதி நிறைவடையவுள்ளது. மாநிலங்களவைத் துணைத் தலைவருக்கான தேர்தல் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் மனு தாக்கல் செய்த மூத்த தலைவர்! - ஹரிவன்ஷ்
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக மாநிலங்களவையின் துணைத் தலைவருக்கு ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஹரிவன்ஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மாநிலங்களவை செயலகத்தின் அறிவிப்பின்படி, செப்டம்பர் 7ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செயல்முறை தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 11 ஆகும். இதையொட்டி, ஜனதா தளம் மாநிலங்களவை உறுப்பினர் ஹரிவன்ஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மீண்டும் மாநிலங்களவை துணைத்தலைவராக ஹரிவன்ஷ் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மாநிலங்களவையில் பிரதி நிதித்துவத்துடன் தேர்தலுக்கான ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலங்களவையை நல்ல முறையில் வழி நடத்தியதற்காக ஹரிவன்ஷ், கட்சிகள் தரப்பில் பரவலாகப் பாராட்டப்பட்டார்.