தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு -காஷ்மீரில் மெஹபூபா முப்தி தோல்வி! - முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா

ஜம்மு-காஷ்மீர் அனந்தநாக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி தோல்வியடைந்தார்.

மெஹ்பூபா முப்தி

By

Published : May 23, 2019, 5:12 PM IST

இந்தியா முழுவதும் 542 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 300க்குமேலான மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்துவருகிறது.

இந்திய தேசிய காங்கிரஸ் 99 இடங்களை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் அனந்தநாக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி தோல்வியடைந்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் ஹஸ்யன் மசூதி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் குலாம் அஹ்மத் மீர் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதற்கிடையில், தேசிய மாநாட்டின் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியில் வெற்றி வாகை சூடினார். பாஜக வேட்பாளர் ஜுகால் கிஷோர் ஜம்மு தொகுதியில் காங்கிரசின் ராமன் பல்லை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

மேலும், மக்களவைத் தொகுதியில் தோல்வியடைந்தாலும் வெற்றியை தேடி பயணிப்போம் என்று ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி தெரிவித்தார். மோடிக்கு தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details