தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் பயங்கவாதிகளுடன் மோதல் : ராணுவ வீரர் பலி - இந்திய ராணுவ வீரர் பலி

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

JK Encounter
JK Encounter

By

Published : Aug 12, 2020, 4:28 PM IST

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இன்று (ஆக. 12) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், கம்ரசிபூரா என்ற பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி முதலில் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து மோதல் வெடித்ததில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவரும் பலியாகியுள்ள நிலையில், மற்றவர்கள் தப்பியோடிவிட்டதாக ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. காயமடைந்த சிப்பாய் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகள், கிரெனெடுகள், வெடி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் சுதந்திர தின விழா நெருங்கி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் ரோந்துப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீரில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரோந்து பணியின்போது திடீர் தாக்குதல் - 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details