முன்னாள் வெளியுறவுத் துறை செயலராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். ஜெய்சங்கர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ஜூன் 1ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு முன் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜின் ட்விட்டர் பக்கத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏதேனும் உதவி கேட்டால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
சுஷ்மா ஸ்வராஜ் வழியை பின்பற்றும் ஜெய்சங்கர்
டெல்லி: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் எப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களின் குறையை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டாரோ அதேபோல் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஜெய்சங்கரும் செயல்பட்டு வருகிறார்.
jaishankar
இந்த செயல்களால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மத்தியில் சுஷ்மா சுவராஜுக்கு பாரட்டுகள் குவிந்தன. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ். ஜெய்சங்கரும் இதேபோல் ட்விட்டரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவி செய்யத் தொடங்கியுள்ளார். ஜெய்சங்கரின் செயலும் பல தரப்பால் பாரட்டப்பட்டுவருகிறது.