தேசிய கல்வி கொள்கை குறித்த கல்வி குழுவின் வரைவு ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இந்த வரைவின்படி மும்மொழி கொள்கை அடிப்படையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாகிறது. இது வெளியான நாள் முதலே தென்னிந்தியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
மும்மொழி கொள்கை; மத்திய அமைச்சர்களின் கருத்து!
டெல்லி: மும்மொழி கொள்கை குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
nirmala sitharaman
தமிழ்நாடு, கர்நாடகத்தில் மொழி உணர்வாளர்கள் பலர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு திமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுரவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மக்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே கல்விக் குழுவின் வரைவு நிறைவேற்றப்படும் என்று தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.