மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமையன்று மாநிலங்களில் உரையாற்றியபோது, தென்னிந்திய மாநிலங்களுக்கு நேர்மையான முறையில் நிதி ஒதுக்க வேண்டுமெனவும், சரியான முறையில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
"தென்னிந்திய மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்" - congress leader
டெல்லி: தென்னிந்திய மாநிலங்களுக்கு சரியான முறையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று, மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.
ஜெய்ராம் ரமேஷ்
இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்த அவர், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட ஐந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி நேர்மையான முறையில் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.
தென்னிந்தியாவை பொறுத்த வரை நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், சதானந்த கவுடா உள்ளிட்டவர்களுக்கு மட்டுமே மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.