மாநிலத்தில் உள்ள ஏழை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயனாளிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் திடீர் மரணம், நிரந்தர இயலாமை ஆகியவற்றிற்கு காப்பீட்டுத் தொகையைப் பெற இயலும்.
இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ .10,000 நிதி உதவியையும் அறிவித்துள்ளார். இந்த தொகையைப்பெற சமந்தப்பட்ட கிராமச் செயலகத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளார். காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒரு மாநில அரசு நிதியளிப்பது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.