ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதிலிருந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதலமைச்சர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மெகபூபா முப்தி ஸ்ரீநகரிலுள்ள சாஷ்மா ஷாஹி குடியிருப்பிலிருந்து அரசு குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் அமைதி தொடர வேண்டும் என்று பிரார்த்தனை நடப்பதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மசூதிகள், கோயில்களில் இந்தப் பிரார்த்த நடப்பதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
நேற்று தொழுகையின்போது, காஷ்மீரின் அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது. முன்னதாக சென்னையிலுள்ள முப்தியின் மகள் இல்டிஜா அவரின் தாயாரை பார்க்க ஜம்மு காஷ்மீருக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க : 'நான் உயிருடன் இருப்பதால் உங்களுடன் பேசுகிறேன்': காஷ்மீர் எழுத்தாளரின் கண்ணீர் கதை.!