ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அதிகாரமளித்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதுடன், அம்மாநிலத்தை மத்திய அரசு இரண்டு யூனியன்களாக பிரித்தது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட 26 பேர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
தற்போது நிலைமை சீராகி வருவதால், வீட்டுச் சிறையிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஐந்து பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்றும் நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.