ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைக்காக மக்கள் ஜகநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி சென்ற ஆண்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்கு பின்னர் அக்.13ஆம் தேதி அவர் வீட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் கூறுகையில், ஜம்மு & காஷ்மீரின் கொடி மீட்டெடுக்கப்படும் வரை வேறு எந்த கொடியையும் ஏற்றமாட்டேன் என்றார்.
இதனிடையே ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் சிறப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக முக்கியமான 7 கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இந்த கூட்டணியின் தலைவராக ஃபரூக் அப்துல்லா தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதைப்பற்றி ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ''இந்தக் கூட்டணியின் பெயர் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி ஆகும். இதன் முக்கிய நோக்கம் மீண்டும் சிறப்புச் சட்டத்தை அமல்படுத்துவது தான். இது ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. ஆனால் பாஜகவிற்கு எதிரான போராட்டம் தான். அதுவும் ஜனநாயக வழியிலான போராட்டம்'' என்றார்.