மே மாதம் 30ஆம் தேதி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நடுகளைச் சேர்ந்த 12 பேர் நந்த தேவி சிகரத்தில் ஏற முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக எட்டு நபர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க "ஆபரேஷன் டேர்டெவில்" என்ற திட்டம் இந்தோ திபத் எல்லை காவல்துறையினரால் திட்டமிடப்பட்டது.
முதலில் ஹெலிக்காப்டர் மூலம் வீரர்களை மலை உச்சியில் இறக்கிவிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 11 வீரர்களும் மலை ஏறிச் சென்று உடல்களை மீட்கும் வண்ணம் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
பலியான எட்டு நபர்களில் ஒருவர் பள்ளத்தாக்கில் வீழ்ந்ததால் அவரது உடல் மீட்கப்படவில்லை. இதுகுறித்து இந்தோ திபத் காவல்துறையினர், உடல்களைக் கண்ணியமாக மீட்டெடுக்க நாங்கள் முயன்றோம் என்றும், உடல்களை எடுத்துவரும் வழியில் கெட்டுப்போவதைத் தடுக்க பணியில் குழிதோண்டிப் புதைத்து பின் சிறிது நேரம் கழித்து எடுத்து வர நேர்ந்ததாகவும் கூறினார்.
உயிரைப் பணயம் வைத்து எழு உடல்களை மீட்ட இந்தோ திபத் காவல்துறை 11 ஐடிபிபி வீரர்களால் 20 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த "ஆபரேஷன் டேர்டேவில்" வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.