இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்கள் பலரும் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக யோகா பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் நடுவே, கரடு முரடான மலைப் பகுதிகளில் பணியாற்றிவரும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உறை பனியையும் பொருட்படுத்தாது இன்று அதிகாலை யோகா பயிற்சியில் ஈடுபட்டது, பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.