இந்தியாவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள கடந்த மார்ச் 24ஆம் தேதி நாடுமுழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. தற்போது லாக்டவுனில் படிப்படியாக தளர்வு மேற்கொள்ளப்படும் நிலையில், இது குறித்து மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், இன்னும் சிலநாட்களில் பருவமழை தொடங்கும் நிலையில் மக்கள் அனைவரும் இதை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மத்திய அரசு எந்தவித முன்னேற்பாடும் இன்றி லாக்டவுன் அறிவித்தது தவறாகும். தற்போது உடனடியாக லாக்டவுனை முற்றாக விலக்குவதும் தவறான முடிவாக அமைந்துவிடும். மஹாராஷ்டிராவுக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை இதுவரை முறையாக கிடைக்கவில்லை என்றார்.