தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 23, 2020, 7:31 PM IST

ETV Bharat / bharat

ஐஐடி வாரணாசியில் இஸ்ரோவின் கல்வி மையம்

ஐஐடி வாரணாசியில் இஸ்ரோவின் விண்வெளி தொடர்பாக கல்வி மையம் அமைக்கப்படவுள்ளதாக, அதன் அறிவியல் செயலாளர் உமாமகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ
இஸ்ரோ

டெல்லி:உத்தரப் பிரதேச மாநிலம் ஐஐடி வாரணாசியில் குறுகிய, நீண்ட காலத் திட்டங்களுக்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இஸ்ரோவின் விண்வெளிக்கான கல்வி மையம் அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக, இஸ்ரோ, இந்திய தொழில்நுட்பக் கழகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவுவதற்காக, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த கல்வி மையத்தின் கீழ், பி.டெக், எம்.டெக் பயிலும் மாணவர்கள் குறுகிய கால திட்டப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நீண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் மாணவர்களுக்கு பிஹெச்டி பயிலுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் குறுகிய காலப் படிப்புகளை கொண்டுவந்து இத்துறைச் சார்ந்த மாணவர்களின் அறிவை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய இஸ்ரோவின் அறிவியல் செயலாளர் உமமாமகேஷ்வரன், "இந்த கல்வி மையத்தின் மூலம், திறன் மேம்பாடு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இஸ்ரோவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடையே எளிதில் கொண்டு செல்ல முடியும்" என்றார்.

இதையும் படிங்க:அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளிவரும் ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்வாட்ச்!

ABOUT THE AUTHOR

...view details