தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 27, 2019, 11:49 PM IST

ETV Bharat / bharat

இஸ்ரோ தயாரித்த பிஎஸ்எல்வி  சி 45 ராக்கெட் வரும் ஏப்ரல் 1ம் தேதி விண்ணில் பாயவுள்ளது!

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்த பிஎஸ்எல்வி  சி 45 ராக்கெட் வரும் ஏப்ரல் 1ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

isro

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த பிஎஸ்எல்விசி 45 ராக்கெட் மூலம் எமிசாட் எனப்படும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுகிறது.

இந்த ராக்கெட் ஏப்ரல் 1ம் தேதி காலை 9:30 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவிலுள்ளஇரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ளது. 436 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் 749 கி.மீ. தூரத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

பிஎஸ்எல்வி- க்யு எல் என்ற புதிய இயந்திர பயன்பாடு இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளானது பாதுகாப்பு துறை ஆராய்ச்சிக்கு பயன்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே முதன்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப்பாதையில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன. இதோடு வணிக ரீதியாக 220 கிலோ எடை கொண்ட28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.மேலும் சோதனை முயற்சியாக நானோ செயற்கைக்கோள்கள் 4 வது நிலையில் (பி எஸ் 4) வைக்கப்பட்டு நிலைநிறுத்தப்படும்.

ABOUT THE AUTHOR

...view details