தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 4, 2019, 9:41 PM IST

ETV Bharat / bharat

விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி ராக்கெட் - இஸ்ரோ சாதனை!

ஹைதராபாத்: டிசம்பர் 11ஆம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

ISRO -next launch
ISRO -next launch

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பிஎஸ்எல்வி சி 48 ராக்கெட் மூலம் ரிசார்ட் 2 பி ஆர் 1 செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து டிசம்பர் 11ம் தேதி மாலை 3 :25 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. சுமார் 628 கிலோ கிராம் எடையுள்ள இந்த செயற்கைக்கோள், 37 டிகிரி சாய்வில் 576 கிமீ சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படவுள்ளது.

பூமியைக் கண்காணிக்கும் பணிக்காக இந்தச் செயற்கைக் கோளானது அனுப்பப்படவுள்ளது. இதில் உள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் பூமியைப் படம் எடுத்து அனுப்பும். மேலும் எல்லைப் பாதுகாப்பு, கடலோர கண்காணிப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

இஸ்ரோ ட்விட்டர் பதிவு

இஸ்ரேல் (1), இத்தாலி (1), ஜப்பான் (1) மற்றும் அமெரிக்கா (6) ஆகிய 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இந்த ராக்கெட்டில் சுமந்து செல்லவுள்ளது. ஜிஎஸ்எல்வி வரிசையில் இது 50ஆவது ராக்கெட் ஆகும். கியு எல் திறன் (4 உந்து மோட்டார்கள்) கொண்ட வரிசையில் பிஎஸ்எல்வி சி 48 ரகத்தில் இரண்டாவது ராக்கெட் ஆகும். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் 75ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாசாவுக்கு முன்னரே சந்திரயானைக் கண்டுபிடித்துவிட்டோம் - இஸ்ரோ சிவன் தகவல்

ABOUT THE AUTHOR

...view details