புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாக தொடக்க விழாவில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொள்ள இன்று (அக்.10) வருகை தந்தார். அதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திட்டமிட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கச் சென்றார்.
அப்போது அங்கு கூடியிருந்த 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், முதலமைச்சர் நாராயணசாமியின் வாகனத்தை முற்றுகையிட முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
முதலமைச்சர் நாராயணசாமியின் வாகனத்தை முற்றுகையிட முயற்சித்த மக்கள் இந்நிலையில், நான்கரை ஆண்டுகளாக வக்பு வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், உடனடியாக வக்பு வாரியம் அமைக்க வலியுறுத்தியும் முற்றுகை முயற்சியில் தாங்கள் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீர வல்லவன் சமாதான முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:புதிய வக்பு வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் தர்ணா!