நாடு முழுவதும் 151 பயணிகள் ரயிலை, 109 பாதைகளில் இயக்குவதற்காக தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி அழைப்பு விடுத்தது.
ரயில்வேயை தனியார்மயமாக்கலை நோக்கி இட்டு செல்லும் மிகப்பெரிய அறிவிப்பு இது. இதன்மூலம், ரயில்வேதுறையில் தனியார் நிறுவனம் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பராமரிப்பு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள ரயில்வேதுறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், பயண நேரத்தை குறைத்தல், வேலைவாய்ப்பை அதிகரித்தல், பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சிறப்பான பயண அனுபவத்தை அளித்தல், தேவை விநியோக பற்றாக்குறையை குறைத்தல் ஆகியவை இதன் நோக்கங்களாக உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.