தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறதா?

ஐ.நா. அறிக்கையின்படி, உலகளவில் 2015 முதல் 2030 வரை 7 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் இறப்பார்கள், மொத்த இறப்பு எண்ணிக்கையில் 18 சதவீதம் இறப்பு எண்ணிக்கை இந்தியாவில் இருக்கும்.

By

Published : Feb 27, 2020, 9:27 PM IST

Published : Feb 27, 2020, 9:27 PM IST

Is childhood in safe hands in India?
Is childhood in safe hands in India?

குழந்தைகளின் இறப்புகளில் 23 விழுக்காட்டிற்கு சுற்றுச்சூழல் சீரழிவு காரணம் என்பதை உலக வங்கி உறுதிப்படுத்திருப்பது சமூகத்தின் பல பிரிவுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எந்தவொரு நாடுகளும் தங்கள் குழந்தைகளின் உடல்நலம், சுற்றுச்சூழல் அல்லது எதிர்காலத்தை போதுமான அளவில் பாதுகாக்கவில்லை என்ற சமீபத்திய உண்மை பலருக்கு ஒரு அடியாக வந்தது. உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், தி லான்செட் நடத்திய ஒரு விரிவான ஆய்வில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நார்வே, தென் கொரியா, நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் குழந்தை நலன் சிறந்ததாக உள்ளது என்று கூறியது.

குழந்தைகள் நலன் அடிப்படையில் மத்திய ஆப்பிரிக்கா, சோமாலியா, சாட் ஆகியவை மிக மோசமாக செயல்படும் நாடுகள் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. குழந்தைகள் பிழைத்திருப்பதற்கும் நல்வாழ்விற்கும் சிறந்த வாய்ப்பை கொண்டு கணக்கெடுக்கப்பட்ட 180 நாடுகளில், ஐ.நா. அடிப்படையிலான தரவரிசையில் இந்தியா 131வது இடத்தைப் பிடித்துள்ளது.

இன்றைய குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதன் மூலம் 2030ஆம் ஆண்டளவில் தனிநபர் கார்பன் வெளியேற்றத்தை எந்த நாடுகளால் குறைக்க முடியும் என்பதையும் ஆய்வு மதிப்பீடு செய்துள்ளது. அல்பேனியா, ஆர்மீனியா, கிரெனடா, ஜோர்டான், மால்டோவா, இலங்கை, துனிசியா, உருகுவே, வியட்நாம் போன்ற நாடுகள் அந்த பட்டியலில் இடம் பெறலாம்.

மேற்கூறிய நாடுகளை விட, இந்தியா போன்ற நாடுகள் திட்டமிடல் அடிப்படையில் நிறைய செய்ய வேண்டும் என்று ஆய்வு சுருக்கமாகக் கூறியுதுள்ளது. வரவிருக்கும் 10 ஆண்டுகளில் தற்போதைய 39.7 ஜிகா டன்களிலிருந்து 22.8 ஜிகா டன்களாக வருடாந்திர கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முடிந்தால் மட்டுமே, தற்போதைய மோசமான சுற்றுச்சூழல் விவகாரங்களை மேம்படுத்த முடியும். இந்த நோக்கத்திற்காக, உலகின் அனைத்து நாடுகளும் காடுகள் அழிப்பைக் கட்டுப்படுத்துதல், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், உணவு வீணாவதை குறைத்தல், மக்கள் தொகை உயர்வை கட்டுக்குள் வைத்திருத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்முக உத்தியை செயல்படுத்த வேண்டும்.

வருங்கால சந்ததியினரின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக, அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபை உறுதியளித்திருந்தது. அதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு, பல்வேறு நாடுகளின் நிலைமைகளை ஆழமாக ஆராய வேண்டும். கடந்த காலத்தை நாம் திரும்பிப் பார்த்தால், ஒரு தலைமுறைக்கு முன்பு, ஆண்டுதோறும் 44 லட்சம் குழந்தைகள் இறந்தனர், 9.5 கோடி குழந்தைகள் தினக் கூலிக்கு சென்றனர், 11.5 கோடி குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது.

கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய நிலைமை மிகவும் சிறப்பாக உள்ளது. இருப்பினும், காலநிலை மாற்றம், குழந்தைகளுடன் பொறுப்பற்ற வணிகமயமாக்கல் ஆகிய இரண்டு காரணிகள் மையபுள்ளியாக இருப்பதால், தற்போதைய தலைமுறை, குழந்தைகளுக்கு எதிர்காலத்தை இருளாக்குகின்றன. உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பதால், உணவு தானிய உற்பத்தி, மகசூல் குறைந்து, ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது.

டெங்கு, மலேரியா, காலரா போன்ற வெப்பமண்டல நோய்கள் அதிகரித்து வருகின்றன. துரித உணவுகள், குளிர்பானங்கள், புகையிலை, மதுபானம் தொடர்பாக தீவிர வணிக போக்குகள் தோன்றுவது தற்போதைய தலைமுறை குழந்தைகள் மீது முன் எப்போதும் இல்லாத, விரும்பத்தகாத தாக்குதல்களை உருவாக்கி வருகிறது. 1975 ஆம் ஆண்டில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் நோயாளிகளின் எண்ணிக்கை 1.10 கோடியாக இருந்தது, 2016ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12.40 கோடியாக அதிகரித்துள்ளது.

இன்று, உடல் பருமன் அபாயம் பணக்கார மற்றும் ஏழை நாடுகளில் பரவலாக உள்ளது. 7 விழுக்காட்டிற்கும் அதிகமான குழந்தைகள் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வயதிற்கு உட்பட்டவர்களில் சுமார் 10 விழுக்காடு பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் ஒட்டுமொத்த பொது சுகாதாரத்தில் வாழ்க்கை முறை, காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைக் காட்டுகின்றன. உடல் பருமனின் போக்கு அதிவேகமாக வளர்ந்து வருகிறது. உணவுப் பிரச்சினை, உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரண்டு உச்சநிலைகள் அதிகம் உள்ள ஒரே நாடு இந்தியா. இது ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் தேசிய சுகாதார உத்தியில் உடனடி மாற்றங்களையும் செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்த போதிலும், 7 லட்சம் குழந்தைகள் இன்னும் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கிறார்கள் என்பது கவலைக்குரியது. ஐ.நா. அறிக்கையின்படி, உலகளவில் 2015 முதல் 2030 வரை 7 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் இறப்பார்கள், மொத்த இறப்பு எண்ணிக்கையில் 18 சதவீதம் இறப்பு எண்ணிக்கை இந்தியாவில் இருக்கும்.

ஆண்டுதோறும், 5 வயதிற்குட்பட்ட 60,000 குழந்தைகள் சரியான நேரத்தில் தடுப்பூசிகளால் தடுக்கக்கூடிய நோய்களால் இறந்து கொண்டிருக்கிறார்கள். 2022க்குள் ஊட்டச்சத்து குறைபாடுகளை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்ட போஷன் அபியான் இன்னும் வேகத்தை அடையவில்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள குழந்தைகளை விட இந்திய குழந்தைகள் கலப்படம் செய்யப்பட்ட உணவை 40 மடங்கு அதிகமாக உட்கொள்கிறார்கள் என்று தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக அரசாங்கங்களால் தொடங்கப்பட்ட வைட்டமின் மற்றும் தாதுசத்து விநியோக திட்டங்கள் இன்னும் செயல்படவில்லை. சிறந்த ஊட்டச்சத்து, சரியான நேரத்தில் தடுப்பூசி மற்றும் மலிவான விலையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்குவது ஆகியவற்றால் பெரிய அளவிலான இறப்புகளைத் தடுக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். அவர்கள் அரசாங்கங்களை இந்த திசையில் செல்ல நிர்பந்தித்தாலும், வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்கின்றன.

தாய் மற்றும் குழந்தைகள் நல திட்ட அமைப்பில் உள்ள ஓட்டைகளால் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் ஊழல்களை வசதியாக மறந்து, ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பை அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரைத்தது. தாய் மற்றும் குழந்தை நலனில் கவனம் செலுத்துவது இந்த தேசத்தின் நலன்களை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும் என்பதை அரசியல் கட்சிகளும் அரசாங்கங்களும் புரிந்து கொள்ளும்போதுதான், இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும்.

இதையும் படிங்க: ஷாங்காங் உச்சிமாநாட்டுக்கு பாகிஸ்தானை அழைக்கணுமா? - தர்மசங்கடத்தில் இந்தியா

ABOUT THE AUTHOR

...view details