டெல்லி:நாட்டின் ஆறாவது மிகப்பெரிய பாதுகாப்பு படையாக எல்லை பாதுகாப்பு படை விளங்கிவருகிறது. இதில் இரண்டு லட்சத்து 65 ஆயிரம் வீரர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான எல்லை பகுதிகளை எல்லை பாதுகாப்பு படை பாதுகாத்துவருகிறது. இதன் 27ஆவது தலைமை இயக்குநராக ராகேஷ் அஸ்தானா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
செயின்ட் ஜான் கல்லூரியில், வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 1984ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலராக பணியில் சேர்ந்தார். குஜராத் காவல்துறையில் வதோதரா மற்றும் சூரத் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.