புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்குச் சாலையில் இரு புறங்களிலும் நடைபாதைகளை ஆக்கிரமித்தது, வணிக வளாகங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குறு கடைகளும் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அலுவலர்களுடன் வணிகர்கள் கடும் வாக்குவாதம்! - ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுச்சேரி: செஞ்சி சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக கட்டடங்கள், கடைகளை காவல்துறை துணையுடன், பொதுப்பணித்துறை பொக்லைன் எந்திரத்தை கொண்டு அகற்றியதால், வியாபாரிகள் அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து, பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் பேரில், இன்று புதுச்சேரி பிரதான சாலையான, செஞ்சி சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றும் பணி பொதுப்பணித்துறை அலுவலர் தேவதாஸ் தலைமையில் நடந்தது. இது காவல்துறையினரின் பாதுகாப்புடன், பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.
அப்போது வியாபாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அரசு அலுவலர்கள் வியாபாரிகளைச் சமரசம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் இந்த சாலையில் தற்போது போக்குவரத்துக்கு ஏதுவான சூழல் நிலவுவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
TAGGED:
ஆக்கிரமிப்புகள் அகற்றம்