தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வெளிநாட்டு விமான சேவைக்கு நோ சான்ஸ்!' - விமான சேவைகள்

டெல்லி: சர்வதேச பயணிகள் விமான சேவை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

plane
plane

By

Published : Jul 31, 2020, 8:18 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமான சேவைகளுக்கு விதித்த தடை நீடித்து வருகிறது. உள்ளூர் விமான சேவைகள் மட்டும் மே மாதம் 25ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச பயணிகள் விமான சேவை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், 'வந்தே பாரத் திட்டத்தின்' கீழ், வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கும், சரக்கு விமானங்களுக்கும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details