அந்த வகையில் நேற்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம். இதையொட்டி நாம் ஒன்றை திரும்பிப் பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனரா? இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்த வகையில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா?
பெண் குழந்தைகளை காப்போம்...! - அக்டோபர் 11ஆம் தேதி
ஹைதராபாத்: அக்டோபர் 11ஆம் தேதியை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக 2012ஆம் ஆண்டு அதே தேதியையிலேயே ஐநா அறிவித்தது. அந்தவகையில் ஆண்டுதோறும் அக்டோடபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
அதற்காக பெண் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கிறோம் என்று, சிறு வயதில் திருமண பந்தத்தில் இணைத்துவிடுவதும் தவறுதான். பெண்கள் இச்சமூகத்தில் பெண் குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை கல்வி உரிமையை பெற்றால், ஒரு குடும்பத்துக்கு உரிமை கிடைக்கிறது. இவ்வாறு கல்வி செல்வதால் பல குடும்பங்கள் பயனடையும்போது ஒரு சமூகம் எழுச்சி அடைகிறது.
அந்த வகையில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது அவசியம். மேலும் அவர்கள் விரும்பும் துறைக்கு வேலைக்குச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். பெண் கல்வி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு என பல்வேறு பெண்கள் சாதிக்க வேண்டும். 'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்று உலக நாடுகளுக்கு முன்னோடியாய் இருந்தது தமிழ்நாடு. அந்நிலை மீண்டு(ம்) வர வேண்டும்...!