தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்! - ஐஎஸ் அமைப்பு

டெல்லி: பாலகோட் தாக்குதலுக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

is

By

Published : Apr 30, 2019, 10:08 AM IST

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை, பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது. அப்போது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்ததாக இந்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், பாலகோட் தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில், இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி உள்ளதாகவும், இதற்கான ஏற்பாட்டை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு செய்துள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details